மாவட்ட செய்திகள்

எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது + "||" + An Iranian national has been arrested in connection with the incident

எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது

எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது
எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது.
திருவொற்றியூர், 

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், ஈரான் நாட்டை சேர்ந்த நோஸ்ராடோலோ (வயது 39) என்பதும், 2018-ம் ஆண்டு சுற்றுலாவாசியாக இந்தியா வந்தவர், அதன்பிறகு இங்கேயே தங்கி விட்டதும் தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாததால் ஆங்காங்கே கிட்டார் வாசித்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது.

அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கும் போலீசார், ஈரான் நாட்டு தூதரகம் மூலமாக அவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. போலி விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களை வழங்கி ரூ.1,000 கோடி முறைகேடா? ஐ.ஏ.எஸ். அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
போலி விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களை வழங்கி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. விபத்து வழக்கில் ரூ.1½ கோடி கையாடல்: ஆவணங்களை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகள் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு
தஞ்சாவூரில் ரூ.1½ கோடி கையாடல் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்களை ஆய்வு செய்ய நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் ‘பாக்கெட்’ வழங்க கோரி வழக்கு
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் ‘பாக்கெட்’ வழங்க கோரி வழக்கு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
4. மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டது.
5. சென்னையில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையில் காற்று, நீரில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பு ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.