திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் விதிமுறைகளை மீறிய பொதுமக்கள்- கடை உரிமையாளர்களுக்கு அபராதம்; பேரூராட்சி அதிகாரி நடவடிக்கை


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் விதிமுறைகளை மீறிய பொதுமக்கள்- கடை உரிமையாளர்களுக்கு அபராதம்; பேரூராட்சி அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2021 10:26 AM GMT (Updated: 13 May 2021 10:26 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தமிழக அரசு இம்மாதம் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையில் மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறந்து இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) எஸ்.நாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறிய பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தார். இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், துப்புரவு மேற்பார்வையாளர் அரிபாபு, உதவியாளர் கிருஷ்ணன், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story