மீஞ்சூர் ஊராட்சியில் தார் சாலை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாயலூர் ஊராட்சியில் அடங்கியது வாயலூர் குப்பம் கிராமம். இங்கு வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 40 ஆண்டுகளாக மண்சாலையில் குடியிருப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த மண் சாலையில் உருவாகும் தூசிகள் வீடுகளுக்குள் புகுந்து மாசு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.எனவே, மீஞ்சூர் காட்டூர் செல்லும் நெடுஞ்சாலையில் வாயலூர் குப்பம் பஜார் அருகே அமைந்துள்ள சாலைகளில் மாசு ஏற்படுவதை தடுக்க மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story