தனியார் கல்லூரிக்குள் புகுந்த 2 பாம்புகள்


தனியார் கல்லூரிக்குள் புகுந்த 2 பாம்புகள்
x
தினத்தந்தி 13 May 2021 4:24 PM IST (Updated: 13 May 2021 4:24 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தனியார் கல்லூரிக்குள் 2 பாம்புகள் புகுந்தன.

போடி:

போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் அம்மாபட்டி செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் நேற்று காலை 2 பாம்புகள் புகுந்தன. இதனை கண்ட கல்லூரி மேலாளர் அய்யனார், போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி, 2 பாம்புகளையும் தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

 பிடிபட்டவைகள், 6 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புகள் ஆகும். அவற்றை போடி வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர்.

Next Story