கும்மிடிப்பூண்டி முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கக்கோரி முதல்-அமைச்சருக்கு மனு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு 915 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 736 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வரும் தமிழர்கள் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,கடந்த 30 வருடங்களாக இந்த முகாமில் வசித்து வருகிறோம். அரசு தரும் உதவி தொகை மற்றும் சலுகை விலையிலான ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு திட்டங்களால் எங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதுவரை அரசின் அனைத்து சிறப்பு திட்டங்களுக்கான பயன்களையும் நாங்களும் பெற்று வந்து உள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழக அரசால் வழங்கப்பட உள்ள கொரோனா நிவாரண நிதியை தமிழகம் முழுவதும் முகாம்களில் வசித்து வரும் எங்களை போன்ற இலங்கை தமிழர்களின் குடும்பத்தாருக்கும் வழங்கிட வேண்டுகிறோம். இதனால் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் நலிவடைந்த இலங்கை தமிழர்கள் ஆன எங்களது வாழ்க்கையும் வளம் பெறும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story