கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2021 5:05 PM IST (Updated: 13 May 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எல்.வி.நகரில் வசித்து வந்தவர் குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், பவித்ரா (21) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்த நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பவித்ரா கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இதற்கிடையே எல்.வி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த இரும்பு குழாயில் குமார் நேற்று காலை துணியினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story