கும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் மோதி விபத்து; டிரைவர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் மோதி விபத்து; டிரைவர் சாவு
x
தினத்தந்தி 13 May 2021 5:15 PM IST (Updated: 13 May 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி மீது அரிசி ஏற்றிச்சென்ற மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரிகள் மோதல்
ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி (வயது 25). லாரி டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அதிகாலை சூலூர்பேட்டையில் இருந்து சென்னை செங்குன்றம் நோக்கி லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது முனுசாமி ஓட்டிச்சென்ற அரிசி லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

பலி
இதில் முனுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடல் பிரேத கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story