அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உள்பட 6 பேர் அடுத்தடுத்து பலி


அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உள்பட 6 பேர் அடுத்தடுத்து பலி
x
தினத்தந்தி 13 May 2021 6:06 PM IST (Updated: 13 May 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி உள்பட 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அரக்கோணம்

அடுத்தடுத்து 6 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு 100-க்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் குறைபாடு காரணமாகவும், மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர். 

இந்த நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் கொரோனா நோயாளி உள்பட 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலைக்குள் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதால் முச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு நோய் காரணமாக இறந்தார்களா? என்பது குறித்து மாவட்ட சுகாதார துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

அடுத்தடுத்து 6 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு கூடுதல் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை நியமனம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story