நாட்டு மருந்து கடைகளில் குவியும் பொதுமக்கள்


நாட்டு மருந்து கடைகளில் குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 May 2021 7:12 PM IST (Updated: 13 May 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நாட்டு மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

திருப்பூர்
திருப்பூரில் நாட்டு மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
நாட்டு மருந்துக்கடைகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொற்று பாதிக்காமல் இருக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பொதுமக்கள் உட்கொண்டு வருகிறார்கள்.
இதுபோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளை நாட்டு மருந்துக்கடைகளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
குவியும் பொதுமக்கள்
இதற்கிடையே  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழக்கடைகள் மற்றும் நாட்டுமருந்துக்கடைகள் இயங்க அனுமதி அளித்தார். இதன் காரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் பொதுமக்கள் ஆடா தொடா சூரணம் உள்பட நாட்டு மருந்துகளை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்குவதால் பலரும் குவிந்து வருகிறார்கள். அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
இதுபோல்  மருந்தகங்களிலும் பொதுமக்கள் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள், ஆவி பிடிக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கிறார்கள்.

Next Story