புனேயில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டவரால் பரபரப்பு
புனேயில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புனே,
புனே மாவட்டம் பிம்பிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக ேதசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்னா பன்சோதே (வயது43) உள்ளார். இவரது அலுவலகம் சிஞ்வட் ரெயில் நிலையம் அருகில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மதியம் 2 மணியளவில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரின் மேலாளர் வந்தார். இதில் அவருக்கும் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து 3 முறை சுட்டுள்ளார். இதில் யார் மீதும் குண்டு பாயவில்லை. அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ.வுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் அலுவலகத்தில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் தானாஜி பவார் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story