விளாத்திகுளம் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
விளாத்திகுளம் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீதிபதிக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விளாத்திகுளம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உடல் சோர்வு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் சிகிச்சை
இதை தொடர்ந்து நீதிபதியும் அவரது மனைவியும் வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது வீடு அமைந்துள்ள பகுதி, நீதிமன்ற வளாக பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story