முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய சகோதரிகள்
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய சகோதரிகள்
திருப்பத்தூர்
கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு, நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் திருப்பத்தூர் நகரில் சலூன் கடை நடத்தி வரும் குமார்- சுதா இவர்களின் மகள்களான தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் அர்ஷிதா (வயது 7), யு.கே.ஜி. படிக்கும் சத்யாஸ்ரீ (5) ஆகிய இருவரும் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரணநிதிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் வழங்கினார்கள்.
அவர்களை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தனது இருக்கையில் அமர வைத்து வருங்காலத்தில் நன்கு படித்து போலீஸ் சூப்பிரண்டாக வரவேண்டும் என வாழ்த்தினார். பின்னர் 2 பேரும் வழங்கிய உண்டியலை உடைத்து பார்த்தபோது அதில் ரூ. 1,095 இருந்தது.
Related Tags :
Next Story