தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி தொழிலாளி பலி


தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 May 2021 9:52 PM IST (Updated: 13 May 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி:
தென்காசி மாவட்டம் ராயகிரி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (48). தொழிலாளி. இவர் தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை பாளை ரோட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த காய்கனி லோடு ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  லோடு ஆட்டோ டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வத்திடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story