வல்லநாடு அருகே தீக்குளித்து இளம்பெண் பலி
வல்லநாடு அருகே தீக்குளித்த இளம்பெண் பலி
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மகள் பூமாதேவி (வயது 20) இவர் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூமாதேவி நேற்று வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடலில் தீப்பற்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story