ஆஸ்பத்திரிக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த வியாபாரி


ஆஸ்பத்திரிக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த வியாபாரி
x
தினத்தந்தி 13 May 2021 10:21 PM IST (Updated: 13 May 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆஸ்பத்திரிக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த வியாபாரி

பெங்களூரு:

கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறாா்கள். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், பெங்களூரு எலகங்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் வியாபாரி நேற்று காலையில் எலகங்கா அரசு ஆஸ்பத்திரிக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வந்தார். ஊரடங்கு காரணமாக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் தனது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராமத்தில் இருந்து எலகங்கா அரசு ஆஸ்பத்திரிக்கு 7 கிலோ மீட்டா் தூரம் அந்த வியாபாரி நடந்தே வந்திருந்தார்.  ஆஸ்பத்திரி முன்பு அவர் வரிசையில் நின்றார். 

ஆனால் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரியிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறினார்கள். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த வியாபாரி, தடுப்பூசி போட முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து தனது வீட்டுக்கு மீண்டும் நடந்தே சென்றார்.

Next Story