போலி மருத்துவமனைக்கு சீல்


போலி மருத்துவமனைக்கு சீல்
x
தினத்தந்தி 13 May 2021 10:21 PM IST (Updated: 13 May 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே போலி மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே திருவேகம்பத்தில் முகமது அசாருதீன் (வயது 23) என்பவர் எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொது மருத்துவம் பார்ப்பதாக தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமாருக்கு புகார் வந்தது. இதன் பேரில் தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார், முகமது அசாருதீன் நடத்தி வந்த மருந்தகத்தை ஆய்வு செய்தார். அப்போது மருந்தகத்தை ஆஸ்பத்திரி போல் நடத்தியது தெரிய வந்தது. காய்ச்சல் என வந்த 10 பேருக்கு ஊசி போடப்பட்டதும், குறுகிய இடத்தில் 2 பேருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதும் தெரிய வந்தது. விதிமுறையை மீறி போலி மருத்துவமனையாக செயல்பட்ட மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
முகமது அசாருதீன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டார மருத்துவ அலுவலர் திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த மருந்தகத்தில் சிகிச்சைக்காக வந்தவர்களை திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் ராம்நகரில் நேற்று மதியம் 1 மணிக்கு மேல் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட்டும், ஒரு ஜெராக்ஸ் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.



Related Tags :
Next Story