கடை வியாபாரிகளுக்கு அபராதம்


கடை வியாபாரிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 May 2021 5:04 PM GMT (Updated: 13 May 2021 5:04 PM GMT)

சிங்கம்புணரியில் தடையை மீறி வாரச்சந்தை நடத்த கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் தடையை மீறி வாரச்சந்தை நடத்த கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தடையை மீறி சந்தை

சிங்கம்புணரியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வியாபாரிகளும் கடைகள் போடவில்லை.
இந்த நிலையில் நேற்று சிங்கம்புணரி சாலையின் இருபுறமும் வாரச்சந்தை வியாபாரிகள் தங்கள் கடைகளை விரித்து வியாபாரம் பார்த்தனர். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் கொரோனா பரவும் காலத்தில் சந்தை அமைக்க கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர். தடையை மீறி கடை வைத்து இருந்த 18 வியாபாரிகளிடம் இருந்து எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அபராத தொகை செலுத்திய பிறகு திருப்பி வழங்கப்பட்டது.

முறையீடு

பின்னர் வியாபாரிகள் சந்தை போட அனுமதிக்கவில்லையென்றால் நாங்கள் வாங்கி வந்த காய்கறிகள் அனைத்தும் அழுகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன? என்று தாசில்தாரிடம் கேட்டனர். அதற்கு அவர் சாலையோரம் கடை விரித்து பொதுமக்களை திரள செய்வதை தடுப்பதற்காக தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தள்ளுவண்டியில், சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை தெரு, தெருவாக விற்க அனுமதி உண்டு என்றார். அதன்பிறகு காய்கறி வியாபாரிகள் அங்கிருந்து தங்கள் காய்கறிகளை அப்புறப்படுத்தி சென்றனர்.

Next Story