சிறப்பு தொழுகைக்கான கலந்தாய்வு கூட்டம்
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் ரம்ஜான் பண்டிகை பிறை காண சிறப்பு தொழுகை நடத்துவது சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி,
இதில் கொரோனா கால நடைமுறையில் அரசின் விதிமுறைகள், தொற்று பரவாமல் சமூக இடைவெளியுடன் நடைபெறவும், அதற்கு வேண்டிய உபகரணங்களை பயன்படுத்தி கொரோனா கிருமிகள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை உடன் சமூக இடைவெளியுடன் அதிகமான அளவில் கூட்டம் கூடாமலும், குறைந்த அளவில் நடத்துவது சம்பந்தமாக பரிசீலிக்கப்பட்டது. தொழுகை நடைபெறும் பள்ளிவாசலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொழுகைக்கு வருபவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவில் தொழுகையில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு அனைத்து ஜமாத் நிர்வாகிகளிடமும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story