திருவண்ணாமலை மாவட்டத்தில் 589 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 589 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 May 2021 10:54 PM IST (Updated: 13 May 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 589 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை

கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 589 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25 ஆயிரத்து 367 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 3,502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று வரை 337 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

Next Story