பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
க.பரமத்தி
தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிலை முல்லை நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த தென்னிலையை சேர்ந்த சண்முகம் (வயது 50), தென்னிலை பட்டக்காரர் தோட்டத்தை சேர்ந்த சிவகுமார் (49), குணசேகரன் (52), கரைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் (31), துக்காச்சி கந்தசாமி பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (46), தென்னிலை முல்லை நகரை சேர்ந்த சாந்தகுமார் (47), பெரிய திருமங்கலத்தை சேர்ந்த சண்முகம் (40) காட்டுபாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (31), க.பரமத்தி மேற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய 9 பேரை பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story