கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர்களிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை
கொரோனா தொற்று பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை
கொரோனா தொற்று பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அமைச்சர்களிடம் கோரிக்கை மனு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா தொழில்துறை கூட்டமைப்பு சங்க கூட்டரங்கில் தொழில்துறையினர் மற்றும் கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அவர்களிடம், முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் செ.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்சுனன், ஏ.கே.செல்வராஜ், சூலூர் வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், வானதி சீனிவாசன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
போர்க்கால அடிப்படையில் பணி
கொரோனா தொற்றால் கோவை மாவட்ட மக்கள் வயது வித்தியாசமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கட்டுப்படுத்த இயலாத வகையில் தொற்று வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
மருத்துவமனைக ளில் போதிய படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் வசதி குறைவாக உள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஆம்புலன்ஸ் காத்திருப்பு அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், கோவேக்சின் முதல் தடுப்பூசி போட்டும் 2-வது தடுப்பூசி கான காலம் முடிந்தும் தடுப்பூசி போட இயலாத சூழ்நிலை என மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா முதல் அலையின் போது எடுக்கப்பட்டது போல் தற்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டு உயிர் இழப்புகளை தடுத்து கோவை மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.
உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்
கொரோனா முதல் அலை தடுத்தது போல் வீதி வீதியாக சென்று கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கேட்டு பெற வேண்டும்.
அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பு களை தடுக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி துரித நடவடிக்கை எடுக்கவும்.
ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொற்றின் தன்மைக்கேற்ப நோயாளிகளை வகைப்படுத்தி மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவக் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு குழு
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும். கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல் தொற்று அலையின் போது அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
அதுபோல் இப்போதும் உணவு வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story