முழு ஊரடங்கில் வெளியே சுற்றிதிரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்


முழு ஊரடங்கில் வெளியே சுற்றிதிரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
x
தினத்தந்தி 13 May 2021 11:10 PM IST (Updated: 13 May 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கில் வெளியே சுற்றிதிரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

நெகமம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படடுள்ளது. 

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெகமம் மற்றும் அதன் கிராமபுறங்களில் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. 

 இதை கட்டுப்படுத்த நெகமம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில்  நெகமம், பல்லடம், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பழைய பஸ் நிலையம் நால் ரோடு ஆகிய இடங்களில் வாகன தணிக்கை செய்த போலீசார் வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரித்தனர். 

இதில், தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை வரிசையாக நிறுத்தி, கொரோனா பரவலை தடுப்பது குறித்து அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கினார்கள்.

Next Story