பரமக்குடி அம்மா உணவகத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு


பரமக்குடி அம்மா உணவகத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2021 11:20 PM IST (Updated: 13 May 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அம்மா உணவகத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

பரமக்குடி
பரமக்குடி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயார் செய்யப்பட்டிருந்த சாம்பார், தயிர் சாதங்களை சாப்பிட்டு பார்த்தார். பின்பு பொதுமக்களுக்கு 3 வேளையும் தரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அம்மா உணவகத்தில் இயங்காமல் இருக்கும் கிரைண்டர்கள், குளிர் சாதனக் கருவிகள் ஆகியவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தினார். அப்போது நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன், நகர் செயலாளர் சேது கருணாநிதி, பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாம்பூர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அருளாந்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் குழந்தை ராஜா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திகைச் சாமி, நெடுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story