முதுகுளத்தூர் பகுதியில் மழை


முதுகுளத்தூர் பகுதியில் மழை
x
தினத்தந்தி 13 May 2021 11:21 PM IST (Updated: 13 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் கொட்டித் தீர்த்த மழை

முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கிடையாது. கழிவுநீர்கால்வாய்களை முறையாக பராமரிக்கப்படுவதில்லை பல இடங்களில் அடைப்பு உள்ளது. மேலும் சிலர் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடு கடைகள் கட்டியுள்ளனர். இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் முதுகுளத்தூர் பகுதியில் நேற்று கோடை மழை பெய்தது. மாலை 2 மணி முதல் 3 மணி வரை 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வீதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் மிதந்து சென்றன. மெயின் பஜார் தெரு, ஆஸ்பத்திரி முதல் தெரு, நாடார் தெரு, முளைக்கட்டு திண்ணை தெரு‌, கொண்னையடி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கடைகள், வீடுகளில் புகுந்தன.

Next Story