பள்ளிபாளையத்தில் தடுப்பணையில் சிக்கிய நாய் மீட்பு


பள்ளிபாளையத்தில் தடுப்பணையில் சிக்கிய நாய் மீட்பு
x
தினத்தந்தி 13 May 2021 11:34 PM IST (Updated: 13 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் தடுப்பணையில் சிக்கிய நாய் மீட்கப்பட்டது.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒடப்பள்ளியில் காவரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இங்கு தண்ணீர் தேக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த தடுப்பணையில் நாய் ஒன்று தவறி விழுந்தது. தடுப்பணையின் ஷெட்டர்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட அந்த நாய் வெளியே வர முடியாமல் தவித்தது. இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது 27) என்ற வாலிபர், தடுப்பணையில் நாய் சிக்கி தவிப்பதை கண்டார். பின்னர் அவர் தடுப்பணையில் இறங்கி நாயை மீட்டு மேலே கொண்டு வந்தார். தடுப்பணையில் சிக்கிய நாயை உயிருடன் மீட்ட தாமரைக்கண்ணனை பலரும் பாராட்டினர்.

Next Story