கர்நாடகத்தில் புதிதாக 35,297 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 35,297 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 May 2021 11:46 PM IST (Updated: 13 May 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 35,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 344 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 35,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 344 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இறந்தவர்களின் எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 27 ஆயிரத்து 668 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 35 ஆயிரத்து 297 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 344 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 34 ஆயிரத்து 57 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் 14 லட்சத்து 74 ஆயிரத்து 678 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 93 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 15 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டியாவில் 1,153 
பாகல்கோட்டையில் 520 பேர், பல்லாரியில் 1,865 பேர், பெலகாவியில் 713 பேர், பெங்களூரு புறநகரில் 1,079 பேர், பீதரில் 257 பேர், சாம்ராஜ்நகரில் 842 பேர், சிக்பள்ளாப்பூரில் 354 பேர், சிக்கமகளூருவில் 445 பேர், சித்ரதுர்காவில் 292 பேர், தட்சிண கன்னடாவில் 812 பேர், 

தாவணகெரேயில் 494 பேர், தார்வாரில் 737 பேர், கதக்கில் 430 பேர், ஹாசனில் 792 பேர், ஹாவேரியில் 160 பேர், கலபுரகியில் 497 பேர், குடகில் 425 பேர், கோலாரில் 488 பேர், கொப்பலில் 437 பேர், மண்டியாவில் 1,153 பேர், மைசூருவில் 1,260 பேர், ராய்ச்சூரில் 170 பேர், ராமநகரில் 518 பேர், சிவமொக்காவில் 880 பேர், துமகூருவில் 1,798 பேர்,

 உடுப்பியில் 891 பேர், உத்தரகன்னடாவில் 791 பேர், விஜயாப்புராவில் 331 பேர், யாதகிரியில் 675 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 161 பேரும், பல்லாரியில் 14 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 5 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், தட்சிண கன்னடாவில் 5 பேரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 10 பேரும், ஹாவேரியில் 9 பேரும், குடகில் 5 பேரும், கோலாரில் 3 பேரும், கொப்பலில் 4 பேரும், 

மண்டியாவில் 11 பேரும், மைசூருவில் 15 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 4 பேரும், சிவமொக்காவில் 10 பேரும், துமகூருவில் 11 பேரும், உடுப்பியில் 6 பேரும், உத்தரகன்னடாவில் 14 பேரும், விஜயாப்புராவில் 8 பேரும், யாதகிரியில் 5 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 344 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நம்பிக்கை
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இறங்குமுகத்தில் உள்ளது. உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அரசு சற்று நிம்மதி அடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் வைரஸ் பரவல் குறையும் என்ற நம்பிக்கையில் அரசு உள்ளது.

Next Story