தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் செத்தது


தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் செத்தது
x
தினத்தந்தி 14 May 2021 1:15 AM IST (Updated: 14 May 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்து புள்ளி மான் செத்தது

கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் புள்ளிமான் ஒன்றை தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு கரகத்திக்கோட்டை பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறிது நேரத்தில் செத்தது. பின்னர் அந்த மானுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டது.


Next Story