பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது


பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 14 May 2021 1:27 AM IST (Updated: 14 May 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). இவர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர், 16 வயது சிறுமி ஒருவரை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அந்த சிறுமியிடம் காட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர், அசோக்குமாரின் பெற்றோரிடம் சென்று கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சிறுமியின் உறவினர்கள், செந்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். பின்னர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்‌ கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அசோக்குமாரின் செல்போனை கைப்பற்றி, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Next Story