கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 May 2021 1:28 AM IST (Updated: 14 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் நகராட்சி சுகாதார துறை சார்பில் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து சுகாதார துறை ஆய்வாளர் பழனி கூறியதாவது:- 
 நகராட்சி கமிஷனர் மல்லிகா, நகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் தெளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பெரிய கடை பஜார், நகைக்கடை பஜார், சின்னக்கடை வீதி, ராமகிருஷ்ணாபுரம், கோட்டை தலைவாசல் தெரு, வாழைக்குளதெரு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டது,
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story