மாணவிகள் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம்


மாணவிகள் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 13 May 2021 7:58 PM GMT (Updated: 13 May 2021 7:58 PM GMT)

மாணவிகள் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. செந்துறை அரசு மருத்துவமனையில் 16 பேர் கொரோனா நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அதிகரிக்கும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதியில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செந்துறை தாசில்தார் குமரையா செய்து வருகிறார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் படுக்கை விரிப்புகள் கொண்டு வரப்பட்டு விடுதியில் படுக்கை அறையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் நுழைவுவாயில் கதவில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகத்துடன் கூடிய பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத சூழ்நிலையில் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும், என்று தெரிகிறது.

Next Story