புதிதாக 297 பேருக்கு கொரோனா


புதிதாக 297 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 May 2021 1:53 AM IST (Updated: 14 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் புதிதாக 297 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 171 பேர் உயிரிழந்துள்ளனர். அரிமளம் ஒன்றியத்தில் 20 பேருக்கும், ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 8 பேருக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story