ரேஷன் கடை ஊழியர் பலி
கொரோனா பாதிப்புக்கு ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றியவர் அல்லிமுத்து (வயது 49). இவர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், முககவசமும் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். எனவே அந்த ரேஷன் கடை ஊழியர் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினரும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story