அரூர் அருகே மது விற்ற 5 பேர் கைது 322 மதுபாட்டில்கள் பறிமுதல்
அரூர் அருகே மது விற்ற 5 பேர் கைது 322 மதுபாட்டில்கள் பறிமுதல்
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி தலைமையிலான போலீசார் அச்சல்வாடி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று ெகாண்டிருந்த பழனி, பழனியம்மாள், சக்திவேல், சீனிவாசன், சாலம்மாள் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 322 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
=======
Related Tags :
Next Story