டேன்டீ தலைமை அலுவலகம் மூடல்


டேன்டீ தலைமை அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 14 May 2021 6:41 AM IST (Updated: 14 May 2021 6:42 AM IST)
t-max-icont-min-icon

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து டேன்டீ தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

குன்னூர்,

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து டேன்டீ தலைமை அலுவலகம் மூடப்பட்டது.

டேன்டீ தலைமை அலுவலகம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக  பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகம்(டேன்டீ), நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

ஊழியர்களுக்கு கொரோனா

இந்த நிலையில் டேன்டீ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் டேன்டீ தலைமை அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அலுவலக உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


Next Story