ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அமைச்சர் தகவல்


ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 9:45 AM IST (Updated: 14 May 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அமைச்சர் தகவல்.

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, 4 ஆயிரம் பேருக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்து அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்படுவதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆம்புலன்சில் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி செய்ய ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 160 படுக்கைகள் இருக்கின்றன. அதனை 280-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை கமிஷனர் எஸ்.ஸ்ரீபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story