பொதட்டூர்பேட்டை பேரூராட்சி வாரச்சந்தை மூடல்


பொதட்டூர்பேட்டை பேரூராட்சி வாரச்சந்தை மூடல்
x
தினத்தந்தி 14 May 2021 5:00 PM IST (Updated: 14 May 2021 5:00 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் வாரச்சந்தை மைதானத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருத்தணி ஆர்.டி.ஓ. வாரச் சந்தைகள், காய்கறிகள் சந்தை, தெருமுனை சந்தை போன்றவற்றுக்கு தடை விதிக்கும்படி உத்தரவிட்டார். பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம்.

ஆர்.டி.ஓ. உத்தரவின் எதிரொலியாக இந்த பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி வாரச்சந்தை மைதானத்தின் இருபுறமும் உள்ள கதவுகளை பூட்டி வாரச்சந்தை மூடப்பட்டுள்ள செய்தியை அறிவிக்கும் அட்டைகளை கேட் கதவில் தொங்கவிட செய்தார்.

Next Story