சாலையை சீரமைக்க கோரிக்கை


சாலையை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2021 5:40 PM IST (Updated: 14 May 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்க கோரிக்கை

வீரபாண்டி
திருப்பூர், ஆண்டிபாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், சின்னாண்டிபாளையம் சின்னியகவுண்டன்புதூர், குளத்துப்புதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக இந்த பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் 4வது குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து இடுவம்பாளையம் சாலை முழுவதும் இருபுறமும் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் பல இடங்களில் மூடப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். 
 தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இப்பகுதியில் சாலையிலிருந்து கிளம்பும் புழுதியினால் பலரும் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். எனது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் விரைவாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story