அமராவதி பாலத்தின் மீது படர்ந்துள்ள முட்செடிகள்


அமராவதி பாலத்தின் மீது படர்ந்துள்ள முட்செடிகள்
x

அமராவதி பாலத்தின் மீது படர்ந்துள்ள முட்செடிகள்

மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மீது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் ஆற்றுப்பாலம் அருகே முள் செடிகள் அதிகளவில் காணப்படுவதாகவும், அந்த முள் செடிகள் பாலத்தின் மீது வரையப்பட்டுள்ள வெள்ளைகோடு வரை வளர்ந்து வந்து விட்டது என்று கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து அவர்கள் கூறுகையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் இருபுறங்களிலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் மீது வரும் வாகனங்களை மறைக்கும் அளவுக்கு, பாலத்தின் மீது வரையப்படுள்ள வெள்ளைக்கோட்டை தாண்டி, சாலையின் மையப்பகுதி வரை முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் பாலத்தின் மீதுள்ள வெள்ளைக்கோட்டிற்குள் நடந்து செல்பவர்கள் முட்செடிகள் தங்களது கண்ணில் பட்டுவிடும் என ஒதுங்கும்போது வாகனம் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story