986 மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது


986 மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 May 2021 8:41 PM IST (Updated: 14 May 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

986 மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பழனி :
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் கடந்த 10-ந்தேதி முதல் மூடப்பட்டன. இதையடுத்து முன்கூட்டியே டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி பதுக்கி வைத்து விற்பதை தடுக்க போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். 
இந்த நிலையில் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் உள்ள தனியார் குடோனில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று குடோனில் அதிரடி சோதனை செய்தனர். அந்த குடோனில் 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குடோனில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக ஆயக்குடி 4-வது வார்டை சேர்ந்த குமார் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story