தூத்துக்குடியில் முககவசம் அணியாத 644 பேருக்கு அபராதம்


தூத்துக்குடியில் முககவசம் அணியாத 644 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 May 2021 9:55 PM IST (Updated: 14 May 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் முககவசம் அணியாத 644 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முக கவசம் அணியாத 644 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28  ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
முக கவசம் அணியாதவர்கள்
தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்ததாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 352 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 30 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 24 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 27 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 44 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 88 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 55 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 24 பேர் மீதும் என மொத்தம் 644 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28  ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
சமூக இடைவெளி
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 7 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.7ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Next Story