தூத்துக்குடி விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த 7-ந் தேதி முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் விமானநிலைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விமான நிலைய மேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை சுகாதார அலுவலர் ஜெனிபர் வித்யா, டாக்டர் அனிஷ்வினோ மற்றும் குழுவினர் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
இதில் விருப்பம் உள்ள பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு துறையினர், விமான நிறுவன ஊழியர்கள் உள்பட மொத்தம் 115 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story