திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 429 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 429 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 429 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 62 ஆனது. 365 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 243 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பழனி அரசு மருத்துவமனையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story