310 பேருக்கு கொரோனா உறுதி
310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 310 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 11 ஆயிரத்து 537 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 182 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 9 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 808 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 148 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பலியாகி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story