கொரோனா வார்டில் சுழற்சி அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு


கொரோனா வார்டில் சுழற்சி அடிப்படையில்  போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 May 2021 10:45 PM IST (Updated: 14 May 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா வார்டு பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும், நோயா ளிகள் வெளியே வருவதை தடுக்கவம் சுழற்சி அடிப்படையில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொரோனா வார்டு பகுதியில் பார்வையாளர்கள் உள்ளே செல்வதை தடுக்கவும், நோயா ளிகள் வெளியே வருவதை தடுக்கவம் சுழற்சி அடிப்படையில் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி களிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுஉள்ளனர். 
இவ்வாறு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 500 பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் சர்வ சாதாரணமாக வெளியில் வந்து நடமாடுவதாகவும், காலை மாலை வேளையில் ஆஸ்பத்திரி வெளி வளாகத்தில் நடைபயிற்சி செல்வதாகவும், பொருட்கள் வாங்க, சாப்பிடுவதற்காக வெளியில் செல்வதாகவும் தகவல் வெளியானது. 
பாதிப்பு
இதுதவிர, கடந்த காலங்களில் கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை வாசலில் உள்ள பாதுகாவலர் அல்லது பணியாளர்கள் மூலம் கொடுத்து அனுப்புவது வழக்கம். தற்போது சர்வசாதாரணமாக கொரோனா வார்டுக்குள் சென்று அவர்களிடம் வழங்கிவிட்டு அங்கேயே தங்கி விடுவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று அதிகமாக பரவும் ஆபத்து உள்ளதாகவும், பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கட்டுப்பாடற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வார்டின் இருபகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 4 மணி நேரத்திற்கு 2 காவலர்கள் வீதம் 12 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதுடைய காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரி பணியாளர்கள் தவிர யாரும் உள்ளே வெளியே செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.
கோரிக்கை
 இந்தநிலையில் போலீசாரின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக சிலர் ஆஸ்பத்திரியில் சிலரின் துணையுடன் சமையலறை வழியாக உள்ளே சென்று கொரோனா வார்டில் நோயாளிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வழியிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நோய்பரவலை தடுக்க வேண்டும்என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story