மயங்கி விழுந்து கர்ப்பிணி சாவு


மயங்கி விழுந்து கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 14 May 2021 10:48 PM IST (Updated: 14 May 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

போடியில் கர்ப்பிணி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

தேனி : 

தேனி மாவட்டம் போடி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் தியானேஸ்வரன். இவரது மனைவி கவுசல்யா (வயது 22). 5 மாத கர்ப்பிணி. 

இந்த நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு நடந்தது. அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

உடனே அவரை கணவர் மற்றும் உறவினர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

இறந்த கவுசல்யாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகிறது. 

ஆனால் இவர் கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.


இந்த சம்பவம் குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் கவுசல்யாவுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story