தைலமரக்காட்டில் தீ


தைலமரக்காட்டில் தீ
x
தினத்தந்தி 14 May 2021 10:59 PM IST (Updated: 14 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

தைலமரக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது.

ஆலங்குடி,மே15-
ஆலங்குடி தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் அமீர் பாட்சா. இவருக்கு சொந்தமான தைலமரக்காடு ஆலங்குடி அருகே ஆயிப்பட்டியில் உள்ளது. நேற்று மாலையில் இந்த காட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய ஊர்தி அலுவலர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story