திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆட்டுக்குட்டியுடன் வந்த 2 வாலிபர்களை நிற்குமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். உடனே போலீசார் பஸ் நிலையம் அருகே காவல் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த வாலிபர்களை விரட்டி மடக்கினார்கள். பின்னர் விசாரித்த போது திருப்பத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சூர்யா (வயது 23) மற்றும் மதகுகுட்டி ராஜீவ்காந்தி நகர் செந்தில்குமார் மகன் பிரசாத் (20) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து பாகனேரி பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுக்குட்டியை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.