கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்ட கலெக்டர் முதல், கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் என அடுத்தடுத்து பல உயர் அதிகாரிகள் நோய் தொற்றுக்கு உள்ளாகி பலர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர். கலெக்டர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டது.உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட் டத்தில் அதிகாரிகளுக்கு வேகமாக கொரோனா பரவி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story