திருப்புவனம்,
திருப்புவனம் பக்கமுள்ள பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது இலுப்பக்குடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ேநற்று முன்தினம் காலை வீட்டின் கதவை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள மரக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த செயின்கள், மோதிரங்கள், தோடுகள் என சுமார் 12 பவுன் நகைகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இந்த திருட்டு குறித்து பிரியா, பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.