மின்தடையால் பொதுமக்கள் அவதி
காளையார்கோவில் பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
காளையார்கோவில்,
இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மறவமங்கலம் துணை மின் நிலையத்தின் கீழ் இயங்கும் வளையம்பட்டி, பாஸ்டின் நகர், புலிக்கண்மாய், பருத்தி கண்மாய் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் தடைபட்டதால் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். மாதாந்திர பராமரிப்பு பணியின் போது மின் கம்பிகளின் மீது படர்ந்துள்ள மரங்களை அகற்றி மின் பாதையை சரிசெய்து முறையாக பராமரிப்பு செய்தால் தான் இதுபோன்ற மின்தடையை சரி செய்ய முடியும்.
எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story